Sunday, June 10, 2012

மாம்பழ
பட்டு உடுத்தி
வழி மேல்
விழி
வைத்து
காத்திருக்கும் 
மஞ்சள்
மலரே!!!!
 சீமைக்கு
ஜீவிதம்
தேடி
சென்ற
மாமன்
வந்திட்டேனடி
வஞ்சி
உந்தன்
கைத்தலம்

பற்றிட!!!
கூடையில்
வைத்திருக்கும்
மலர்
மாலை
சூட்டி
வரவேற்றிடயோ!!!!

Sunday, December 18, 2011

தேநீர் வியாபாரி…




அதிகாலை முதல்
அந்திசாயும் வரை
அலுக்காமல் உழைத்திடும்
தொழிலாளிக்கும்
மாநகர் கான்க்ரீட்
பூங்காவாகி போன
அலுவல்களில்
அலுவல்
புரியும்
அலுவலர்க்கும்
ஏற்படும்
அக
அலுப்புகளை
புறந்தள்ளி
புத்துணர்ச்சி
பூக்கவைக்க
ஆவி பறக்க
ஆற வைத்த
பருகும் சூடில்
திடமாகவோ
நிறமாகவோ
ஏலம் கலந்தோ
இவன் தரும்
தேநீர் போதுமானது
கோப்பைகள்
குறைய குறைய
இவன்
புத்துணர்ச்சி கூடும்
குறையாவிடில் குறையும்
பல நேரங்களில்
பலருக்கு பசியாற்றும்
இவன் தேநீர்
இவனுக்கு
மட்டும்
ஏனோ
விற்காவிடில்
ஆற்றுவதில்லை
இவன்
பசியை









மலர்ந்தது…

மலர்ந்தது…

அன்னாந்து பார்த்தும்
தூவல் கடித்தும்
முகத்தாடை தடவியும்
புகையிலை புகைத்தும்
மது அருந்தியும்
கடலலை ரசித்தும்
நந்தவனத்தில் நடந்தும்
வராத வார்த்தைகள்
மலர்ந்தது
மழலையின்
முகம்
கண்டவுடன்
என்
கவிதைக்கு

Sunday, November 20, 2011

தலைவர் வருவார்


கதிர்காம
கந்தனும்
உம்மை
காக்கவில்லை
தந்தையர்
தேசமும்
உமக்கு
துரோகம்
இழைத்தது
அதை
பொறுத்திடா
தோழன் முத்துகுமரனும்
தோழி செங்கொடியும்
தம்
இன்னுயிர் ஈந்தனர்
இவை
எல்லாம்
கண்டு
உள்ளம்
பொறுமுகிறேன்
இந்த வீணாய் போனவன்
கண்ணாடி சிறையில்
வருந்தாதே
தொப்புள்
கொடி
உறவே
வரும்
மாவீரர்
தினமான
நவம்பர் 27 ல்
முதல் புலி
வரும்
ஈழம்
மீட்டெடுக்கும்
கந்தன்
கைவிட்டாலும்
காவலன்
காப்பான்
என்று
நம்புவோமாக

Wednesday, October 5, 2011

காதல் போதை

சட்டென்று என் எதிரே தோன்றிய
இறைவன் கேட்டான்
மதி வேண்டுமா மது வேண்டுமா என்று?
மதி இருந்தால்
கண்டதையும் யோசிக்க சொல்லும்
ஏதாவது ஒன்றை  செய்ய சொல்லும்
ஏன் அவளையே மறந்து விட கூட சொல்லும்
மது இருந்தால்
விட்டு பிரிந்த அவள் நினைவுகளிலே
 மயங்கி பின் மறித்தும் விடலாம்
என்பதால்
மது போதும் என்றேன்…
  
 
 
 

Saturday, October 1, 2011

நடிகர் திலகம்


இந்திய திரைஉலகின்
தெய்வமகனே
நாங்கள் கண்ட
கட்டபொம்மனே
எங்கள் கப்பல் ஒட்டிய தமிழனே
இந்தியாவின்
மர்லன் ப்ரண்டோவே
நடிப்பிலே
உமக்கு முன்னோடி
இல்லை
உமக்கு பின்னோடி
வந்தவர் பலர்
நடிப்பின் இலக்கணமே
என்று பிரான்சிலே
கைரோவிலே
ஏற்று கொண்ட
உம்மை
ஓர் இந்திய சிறந்த நடிகருக்கான
தேசிய விருது
கூட தராமல்
ஒதுக்கப்பட்டதை
எண்ணி
மனம் வேகிறது
இறந்தும் இறவா
புகழோடு வாழ்பவரே
இந்த மண்ணை விட்டு
நீர் மறைந்தாலும்
என்றுமே
திரை உலகின்
விடி வெள்ளி நீர்தான்


Sunday, September 25, 2011

செங்கொடி

"செங்கொடி"

இறந்த
பின்
இருந்து
சாதித்து
இருக்க வேண்டுமென்றனர்
இறந்ததால்தான்
அரசை
தூக்கு கயிறு
நோக்கி
திரும்பச் செய்யும்
சாதனை செய்தாள்
இந்த உதிர்ந்த
மலர் கொடி
எமது தோழர்
செங்கொடி
நெஞ்சு நிமிர்ந்த
எமது வீரவணக்கங்களை
சமர்பிக்கிறோம்


Saturday, November 22, 2008

மனிதபிறவி

ஒருவனும்

ஒருத்தியும்

ஒருயிராய்

ஒருங்கிணைய

இன்னொரு

உயிராய்

அழுகையோடு

இன்பம்பொழிந்து

தலைகீழாய்

உலகில்

உதித்து

தவழ்ந்து

வாழ்க்கை

பாதையில்

சிரமப்படாமல்

நேராகச் செல்ல

சிரமப்பட்டு

கண்ணீரோடு கவலையில் வாடி

பொருளைத் தேடி — பின்

காதல் நாடி

காமத்தில் கூடி — மீண்டும்

இன்னொரு உயிராய்

உதித்து

உதித்து

மறையும்

இந்தப்

மனிதப்பிறவியில்

முடி வேந்தாயினும்

பிடிச் சாம்பலாய்

காற்றில் கலக்கணும்

ஆயினும்

மீண்டும்

மனிதனாய்

தோன்றி

மறைய

மாதவம்

புரிவேன்

Monday, October 20, 2008

அம்மா

அழகு
அழகாய்
ஆயிரமாயிரம்
பொய்களை
ஏதேதோ
கவிதை
என்று
எழுதினேன்
ஏனோ
உன்னைப்பற்றி
எழுத
எத்தனிக்கையில்
"அன்பு"
என்ற
மூன்றெழுத்தை
தவிர
வேறு
எழுத்துக்களையோ
வார்த்தைகளையோ
காகிதத்தில்
தூவவில்லை
என்
தூவல்

வேண்டும் இன்னுமோர் சுனாமி!

காலார நடந்து
கடற்கரைக்கு
காலத்தை
களிப்போடு
கழிக்க
வந்தேன்
கடற்கரை
கட்டுமரங்கள்
காதல் போர்வையில்
காம களியாட்டம்
ஆடுவோர்
களிப்பு அறை
ஆனதால்
கடுஞ்சினத்தோடு
இறைவனிடம்
வேண்டினேன்
இன்னுமோர்
சுனாமி
வேண்டும்
என்று