அதிகாலை முதல்
அந்திசாயும் வரை
அலுக்காமல் உழைத்திடும்
தொழிலாளிக்கும்
மாநகர் கான்க்ரீட்
பூங்காவாகி போன
அலுவல்களில்
அலுவல்
புரியும்
அலுவலர்க்கும்
ஏற்படும்
அக
அலுப்புகளை
புறந்தள்ளி
புத்துணர்ச்சி
பூக்கவைக்க
ஆவி பறக்க
ஆற வைத்த
பருகும் சூடில்
திடமாகவோ
நிறமாகவோ
ஏலம் கலந்தோ
இவன் தரும்
தேநீர் போதுமானது
கோப்பைகள்
குறைய குறைய
இவன்
புத்துணர்ச்சி கூடும்
குறையாவிடில் குறையும்
பல நேரங்களில்
பலருக்கு பசியாற்றும்
இவன் தேநீர்
இவனுக்கு
மட்டும்
ஏனோ
விற்காவிடில்
ஆற்றுவதில்லை
இவன்
பசியை

No comments:
Post a Comment