Monday, October 20, 2008

அம்மா

அழகு
அழகாய்
ஆயிரமாயிரம்
பொய்களை
ஏதேதோ
கவிதை
என்று
எழுதினேன்
ஏனோ
உன்னைப்பற்றி
எழுத
எத்தனிக்கையில்
"அன்பு"
என்ற
மூன்றெழுத்தை
தவிர
வேறு
எழுத்துக்களையோ
வார்த்தைகளையோ
காகிதத்தில்
தூவவில்லை
என்
தூவல்

வேண்டும் இன்னுமோர் சுனாமி!

காலார நடந்து
கடற்கரைக்கு
காலத்தை
களிப்போடு
கழிக்க
வந்தேன்
கடற்கரை
கட்டுமரங்கள்
காதல் போர்வையில்
காம களியாட்டம்
ஆடுவோர்
களிப்பு அறை
ஆனதால்
கடுஞ்சினத்தோடு
இறைவனிடம்
வேண்டினேன்
இன்னுமோர்
சுனாமி
வேண்டும்
என்று

கவிதா

கவி
தா
கவி
என
கவிதா
கேட்க
சங்கப்
புலவன்
போல்
இன்று
முளைத்த
காளானான
நானும்
எழுத
எண்ணி
கன்னித்
தமிழோடு
கலவியாடி
குழவியாய்
ஈன்றேன்
கவிதையாய்
அவள்
பெயரையே
"கவிதா"
என்று


Sunday, October 19, 2008

ஹைக்கூ

நிலவு
வெப்பம்
கக்கிடுமா
வியர்த்திருக்கிறது
புற்களுக்கு
பனித்துளி

முரண்

மழை
வந்தது
பள்ளி விடுமுறை
விட்டதால் ஆனந்தம்
மகனுக்கு..!
ஒரு நாள்
கூலி போனதில்
வருத்தம்
அப்பனுக்கு..!

தாய்மை

சுகமான
சுமை
சுமந்திட
சுமையை
சுமந்தாள்
சுகத்தோடு

Saturday, October 18, 2008

காதல் கடிதம்

அன்புள்ள திருடிக்கு
திருடிதான்
என் இதயத்தை திருடியதால்!
நேராய்ச் சொல்லிவிடுகிறேன்
இது காதல் கடிதம்தான்


வெறும் கடிதம் அல்ல
உன்னை பார்த்தது முதல்
எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை
அதிகபட்ச உணர்ச்சிகளோடு
குறைந்தபட்ச உண்மைகளோடு அந்த
உணர்ச்சிகளின் உள்ளே
கலந்து
விடுகிறேன் தூது
உயிர் விடும் தூது


எழுதலாமா? சொல்லாமா?
என்ற எண்ணப் போராட்டத்தில்
நான் இருக்க

என் பேனா அனிச்சை
செயலாய் காகிதத்தை
முத்தமிட்டது



....... அன்று தான் உன்னை பார்த்தேன்
மின்னலென என்னைக் கடந்தாலும்
உயிர் பூவை மலரச் செய்துவிட்டுப்
போனாய் உனக்குத் தெரியாமலே!



அந்நாள் முதல்
உன் சிநேகம் பெறுவதே
சிரசான கடமையென்று
சிரத்தையாய் செய்தேன்
சிறகில்லாத தேவதை நீயும்
சிநேகம் தந்தாய்


ஒவ்வொரு நாளும்
உன்னை பார்க்கும் பொது
உயிர் பூ உயிர் பெறுகிறது
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்

அது சருகாய் உலர்கிறது



எந்த பேனாவில்
எழுதினாலும்
முதலில் உன் பெயர்
எழுதுவது
பழக்கமாகிப் போனது


நீ வெட்டிப் போடும்
நகங்கள்
என் மன வானில்
மூன்றாம்
பிறைகளாய்
முளைக்கின்றன


நீ தொட்டு
எழுதிய
என்
பேனா
நான் பூஜிக்கும்
பொருளாய் போனது


என் விழிமேல்
நின்றுக் கொண்டு
அன்பாய் என்னைத் தழுவ வரும்
நித்திரா தேவியோடு
நித்தம் சண்டை செய்கிறாய்


பூவின் மென்மை
தெரியாத ஆண்மையாளன்
நான்
என்னுள்
உன் நினைவுகளை
வாடா மலராய் மலரச் செய்து
மென்மை அறியவைத்தாய்


என்னிடம்
நீ காட்டும்
உன் மன நிலையே
என் வானிலை
உன் கோபம்
என்னைச் சுட்டெரிக்கும்
வெயில்!
என் கவிதைக்கு
உன் பாராட்டு
ஆனந்த மழை!
என் காதலை
உன்னிடம் சொல்ல
நினைன்க்கும் காலம்
நடுக்கும் குளிர்!


கவிதைக்கு பொய் அழகு
காதலுக்கு மெய் அழகு
புரியாத பருவத்தில்
பலப் பெண்களை நேசித்து இருக்கிறேன்
அது வெறும் இனக்கவர்ச்சி
தொடத் தூண்டும் உணர்ச்சி
என்பதை அறிந்து தவறு செயும்முன்
களை என்று களைந்தேன்
உன்னிடம் கொண்டது கவர்ச்சி அல்ல
காதல்!

அழகின் உருவே
உன் பார்வையின் பொருள் புரியாமல்
தரையில் விழுந்த மீனாய் துடித்து இருக்கிறேன்
துடிப்பின் உச்சத்தில் காதலை சொல்லிவிட துணிவேன்
ஏனோ கொண்ட நட்பால் தயங்கி நிற்பேன்


நட்பா? காதலா?
என்ற பட்டிமன்றம்
மனதிற்குள்ளே
தீர்ப்பாய்
"காதலின் முதல் படி நட்பு"
என்ற ஆங்கில முதுமொழி
முடிவை சொல்லிவிட முயன்றேன்


இது நாள் வரை
மௌனமாய் இருந்ததன் காரணம்
உன் சிநேகம்
அதனால் நான் கொண்ட அச்சம்


சொல்லி காதலிப்பதைப் போல்
சொல்லாமல் காதலிப்பதும் ஓர் சுகம்!
அந்த சுகம்!
தினம் தினம்
செத்து செத்து பூப்பூக்கும்
அனுபவம்!
சொல்லாத காதல்
இசைக்காத புல்லாங்குழல்
ஆகையால்
காதலைச் சொல்லிட
கடற்கரைக்கு அழைத்தேன்
தொலைப்பேசியில் உன்னை


கடற்கரை!
கரையிடம் காதலைச்
சொல்லிட
ஆவலாய் துள்ளி வந்து
ஏனோ சொல்லாமல்
ஹோவென்ற ஏக்கப் பெருமூச்சோடு
பின் செல்லும்
அலையாய்
நான்
நீ அருகே இருந்தும்
காதலை சொல்லவில்லை
மீண்டும் தடையாய் நட்பு! அச்சம்!


காலமாகிவிட்டதென கிளம்பினாய்
நீ போகும் தடம் பார்த்தேன்
அங்கே
உன் கால் தடம் ஓவியமாய்
பத்திரப் படுத்த கையில் அள்ளினேன்
ஆர்வமாய்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
கலைந்துவிட்டது
இருந்தும் உன் உள்ளங்காலின்
உஷ்ணம் என் உள்ளத்தில்
உறைந்துவிட்டது
உறைந்த உள்ளத்தோடு
உறைவிடம் திரும்பினேன்
உயிரின் வார்த்தையை சொல்ல
உதடு மறுத்துவிட்டது
உதடு மறுத்ததை
காகிதத்தில் வரைந்து
உன்னிடம் அனுப்புகிறேன்
மன நிறைவோடு


ப்ரிய சகியே!
ப்ரியமிருந்தால் காதலை தெரிவித்திடு
இல்லை நட்பை தொடர்ந்து தருவித்திடு
- நேசத்துடன்
இரா. சதீஷ் குமார்.

விலைமகள்

எப்படி
மீட்டினாலும்
மோகம்
ஒன்ரே
ராகமாய்
தரும்
வீணை

பேனா

மற்றவர்
சிந்தனை
கருவை
காகித
மனையாளின்
மடியில்
மழலையாய்
தவழச்
செய்திட
தன்
விந்தைக்கொண்டு
விந்தைச்செய்திடும்
வித்தைக்காரன்..!

Wednesday, October 15, 2008

வறுமை

அடுப்பில்
தூங்கிய
பூனை
தட்டில்
பாசம்
மறந்தது
பசி