ஒருவனும்
ஒருத்தியும்
ஒருயிராய்
ஒருங்கிணைய
இன்னொரு
உயிராய்
அழுகையோடு
இன்பம்பொழிந்து
தலைகீழாய்
உலகில்
உதித்து
தவழ்ந்து
வாழ்க்கை
பாதையில்
சிரமப்படாமல்
நேராகச் செல்ல
சிரமப்பட்டு
கண்ணீரோடு கவலையில் வாடி
பொருளைத் தேடி — பின்
காதல் நாடி
காமத்தில் கூடி — மீண்டும்
இன்னொரு உயிராய்
உதித்து
உதித்து
மறையும்
இந்தப்
மனிதப்பிறவியில்
முடி வேந்தாயினும்
பிடிச் சாம்பலாய்
காற்றில் கலக்கணும்
ஆயினும்
மீண்டும்
மனிதனாய்
தோன்றி
மறைய
மாதவம்
புரிவேன்